யாழ். தென்மராட்சி பிரதேசத்தின் சிறந்த இளைஞர் கழகங்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று (20.01.2019) முற்பகல் தென்மராட்சி கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

தென்மராட்சி பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் அனுராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் செல்வி வினோஜிதா, சாவகச்சேரி பிரதேசசபை உப தவிசாளர் மயூரன், சாவகச்சேரி நகரசபையின் உப தலைவர் பாலமயூரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள். இந்நிகழ்வில் தென்மராட்சி பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் அனுராஜ், தென்மராட்சி பிரதேச இளைஞர் கழகங்களின் தலைவர் நக்கீரன் மற்றும் இளைஞர் கழகங்களின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது.

தொடர்ந்து இளைஞர் கழகங்களின் செயற்பாடுகள் குறித்த விளக்கமளிப்பும் பிரதம விருந்தினர் உரையும் இடம்பெற்றது. நிகழ்வின் இறுதியில் இளைஞர் கழகங்களுக்கான கௌரவிப்பும் பரிசில் வழங்கலும் இடம்பெற்று நிகழ்வுகள் நிறைவுபெற்றன.