புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கிராம எழுச்சித் திட்டத்தில் தனது விசேட நிதி ஒதுக்கீட்டின்கீழ் 10லட்சம் ரூபாவில் போடப்பட்ட கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ ஞானப்பழனிமுருகன் தேவஸ்தான அயல் வீதியினை இன்றுபிற்பகல் (20.01.2019) சென்று பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், பிரதேச சபை உறுப்பினர்கள் இ.கெங்காதரன், அகீபன் மற்றும் கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ ஞானப்பழனிமுருகன் தேவஸ்தான குருக்கள், ஆலய நிர்வாகத்தினர், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தார்கள். இதன்போது ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்களால் பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மற்றும் பிரதே சபை உறுப்பினர்கள் வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.