Header image alt text

வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயத்தினை தொல்பொருள் திணைக்களத்தினர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பதிவுசெய்து தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமாக்குவதற்கு மேற்கொண்டுள்ள அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பாக சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய நிர்வாக சபையினரும், சமளங்குளம் கிராம மக்களும் இன்று (22.01.2019) செவ்வாய்க்கிழமை புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களைச் சந்தித்து உரையாடியதுடன், இது தொடர்பாக உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்கள்.

ஆலயத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினருடன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு உறுப்பினர்களான க.சந்திரகுலசிங்கம்(மோகன்)-கட்சியின் உபதலைவர், வவுனியா நகரசபை உறுப்பினர்), சு.காண்டீபன்-வவுனியா நகரசபை உறுப்பினர்), த.யோகராஜா-கட்சியின் தேசிய அமைப்பாளர், பிரதேச சபை உறுப்பினர்) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள். Read more

வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஆளுநர் சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சந்திப்பு யாழ். நூலக கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காணப்படும் காணிகள் மற்றும் நீர்வளங்கள் அவற்றில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. Read more

மட்டக்களப்பு – வாகரைப் பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரது கணவரின் சடலம் வாவியிலிருந்து இன்று (22) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகரை அழகாபுரியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான காளிக்குட்டி சுதாகரன் (வயது 38) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இவர் வாகரைப் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பு பெண் உறுப்பினரான குமுதலெட்சுமியின் கணவர் என தெரிவிக்கப்படுகின்றது. மீன்பிடித் தொழிலாளியான இவர் தட்டுமுனை ஆற்றில் இறால் பிடிப்பதற்காக வலை கட்டுவதற்கு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சென்றிருந்தார். Read more

வவுனியா சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலயத்தின் தைப்பூச நிகழ்வு ஆலயத்தின் தலைவர் திரு .மாதவன் அவர்களின் தலைமையில் (21.01.2019) இன்று நடைபெற்றது .
இதன்போது அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான போட்டி பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி .ரி .லிங்கநாதன் ,USAID நிறுவனத்தின் பணிப்பாளர் திரு .கார்த்திகேயன் ,தமிழ் விருட்சத்தின் தலைவர் திரு சந்திரகுமார் கண்ணன் ,சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி .மகேஸ்வரி,முன்பள்ளி ஆசிரியர் திருமதி .மதியரசி, சமுக ஆர்வலர் திரு .சௌந்தர் ,காட்டு விநாயகர் ஆலய தலைவர் திரு .சிவகாந்தன் ,மற்றும் மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர் . இத்துடன் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது . Read more