வவுனியா சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலயத்தின் தைப்பூச நிகழ்வு ஆலயத்தின் தலைவர் திரு .மாதவன் அவர்களின் தலைமையில் (21.01.2019) இன்று நடைபெற்றது .
இதன்போது அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான போட்டி பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி .ரி .லிங்கநாதன் ,USAID நிறுவனத்தின் பணிப்பாளர் திரு .கார்த்திகேயன் ,தமிழ் விருட்சத்தின் தலைவர் திரு சந்திரகுமார் கண்ணன் ,சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி .மகேஸ்வரி,முன்பள்ளி ஆசிரியர் திருமதி .மதியரசி, சமுக ஆர்வலர் திரு .சௌந்தர் ,காட்டு விநாயகர் ஆலய தலைவர் திரு .சிவகாந்தன் ,மற்றும் மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர் . இத்துடன் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது .