நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசமைப்பு வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதை தான் எதிர்க்கமாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று அரசமைப்பு வரைபு தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மஹிந்த மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அரசமைப்பு வரைபுக்கு எதிர்ப்பைப் போல அரசமைப்பு திருத்தங்களுக்கும் எதிர்ப்பு இல்லையென்பதை தெளிவாக குறிப்பிடுகின்றோம். தற்போதைய அரசமைப்பில் விரிவான மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் அடுத்த பொதுத் தேர்தலின் போது அரசமைப்பு திருத்தம் தொடர்பில் எமது யோசனையையும் நாம் முன்வைத்து அதற்காக மக்களின் ஆணையைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம். எமது அந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு மக்களிடமும் சகல அரசியல் கட்சிகளிடமும் இந்த நேரத்தில் கோரிக்கை விடுப்பதாக மஹிந்தவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.