இலங்கையின் அடிப்படைச் சுகாதாரம் மற்றும் சுகாதார சேவைகளின் தரத்தை உயர்த்துவதற்காக 200 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணங்கியுள்ளது.

உலக வங்கி சார்பில் உலக வங்கியின் இலங்கை வதிவிடப் பணிப்பாளர் ஹய்டா ஸ்வராய் மற்றும் இலங்கை நிதிமையச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஆகியோர் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். இந்த இணக்கபாட்டின் கீழ் இலங்கையின் அடிப்படைச் சுகாதார வசதிகளை மேம்படுத்தல், தொற்றா நோய்களை இனங்காணுதல் மற்றும் முகாமைத்துவம், மக்கள் தொகை மற்றும் மக்கள் தொகையில் கவனம் செலுத்தப்பட வேண்டிய பகுதியினருக்கு தேவைப்படும் சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல் என்பன முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.