மாலி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை இராணுவ வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூன்று இலங்கை வீரர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இராணுவ வீரர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. மாலி நாட்டின் டொவ்ன்ஸா பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவ வாகனம் மீது ரிமோட் கன்ரோல் மூலம் இயங்கும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்று காலை 06.30 மணியளவில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது. தாக்குதலில் இராணுவ கேப்டன் ஒருவரும் இராணுவ சிப்பாய் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.