Header image alt text

இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகமாக இலங்கை பாதுகாப்புச் சேவையின் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிரான இலங்கை சுங்கப் பணியாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்து இடம்பெறுகின்றது.

இது தொடர்பில் பிரதமர், நிதியமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றின் மூலம் இலங்கை சுங்கப் பணியாளர்கள் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் இலங்கை சுங்கத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக நிதியமைச்சின் மேலதிக செயலாளர் எச்.ஜி. சுமணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். Read more

சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கையின் போது எற்படும் காலதாமதம், அசௌகரியங்களைக் குறைப்பதற்கான நடவடிக்ககைகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே, அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த விசேட கூட்டத்தில் மேலும் அவர் கருத்து தெரிவிக்ககையில், ‘தற்போது எமது சர்வதேச விமான நிலையத்தில் சில குறைபாடுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானதும் முதன்மையானதாகவும் உள்ள பிரச்சினையானது பயணிகளது குடிவரவின் போது ஏற்படும் நெரிசல் மற்றும் காலதாமதமாகும். Read more