Header image alt text

வவுனியா பொன்னாவரசன்குளம் கிராமத்தில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 70 பாடசாலைப் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் நேற்றுமுன்தினம் (31.01.2019) வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இலண்டனில் வதியும் திரு. தர்மலிங்கம் நாகராஜா(பொக்கன்) அவர்கள் இதற்கான நிதியுதவியினை வழங்கியிருந்தார். பொன்னாவரசன்குளம் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு உறுப்பினர்களான த.யோகராஜா (பிரதேசசபை உறுப்பினர்), வே.குகதாசன்(பிரதேசசபை உறுப்பினர்), வே.சிவபாலசுப்பிரமணியம், க.மகேந்திரன் ஆகியோரும், கொடையாளி தர்மலிங்கம் நாகராஜா, பிரதேசசபை உறுப்பினர் நந்தகுமார், கட்சி அங்கத்தவர் சந்திரன், தொண்டு நிறுவனப் பிரதிநிதி யசோதரன் மற்றும் Read more

வவுனியா பொன்னாவரசன்குளம் வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த வலுக்குன்றிய குழந்தையொன்றின் தாயாரான சிவராசா தயாநிதி என்பவருக்கு முதற்கட்டமாக 5ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இலண்டனில் வதியும் திரு. தர்மலிங்கம் நாகராஜா(பொக்கன்) அவர்கள் இதற்கான நிதியுதவியினை வழங்கியிருந்ததோடு, மாதாந்தம் அவருக்கான மேற்படி நிதியுதவியைத் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் (31.01.2019) இவ்வுதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு உறுப்பினர்களான த.யோகராஜா (பிரதேசசபை உறுப்பினர்), வே.குகதாசன்(பிரதேசசபை உறுப்பினர்), வே.சிவபாலசுப்பிரமணியம், க.மகேந்திரன் ஆகியோரும், கொடையாளி தர்மலிங்கம் நாகராஜா, பிரதேசசபை உறுப்பினர் நந்தகுமார், கட்சி அங்கத்தவர் சந்திரன், தொண்டு நிறுவனப் பிரதிநிதி யசோதரன் மற்றும் Read more

யாழ். இளவாலை உயரப்புலம் ஸ்ரீமுருகன் முன்பள்ளியில் 2019ம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கால்கோள் விழா 28-01-2019 அன்று இடம்பெற்றபோது புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதம விருந்தினராகவம் வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினரான எஸ்.கே.அச்சுதபாயன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் திரு.பா.கஜதீபன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவூம் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கொள்வனவூ செய்யப்பட்ட ரூபா ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் பெறுமதியான தளபாடங்களும் சிறுவர்களுக்கான விளையாட்டுப்பொருட்களும் முன்பள்ளி பொறுப்பாசிரியரிடம் கையளிக்கப்பட்டன. Read more

யாழ். கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 30-01-2019 அன்று இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் திரு.அ.ஆனந்தராசா தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ த.சித்தார்த்தன் அவர்களும்,

சிறப்பு விருந்தினர்களாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் நா. சிவநேசன், சித்த ஆயள்வேத வைத்தியரும் பழைய மாணவியுமான திருமதி பூபதீஸ்வரி இரவீந்திரன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினரும் புளொட் முக்கியஸ்தருமான இராசேந்திரம் செல்வராசா (நீர்வேலி செல்வம்), வட மாகாண கல்வித் திணைக்களத்தின் ஸ்டெப்ஸ் கல்வி நிறுவனத்தின் பயிற்றுனரான திருமதி ரேணுகா பேரின்பமூர்த்தி ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். இவ் வித்தியாலயத்தின் மைதான புனரப்பிற்கும் சுற்றுமதில் அமைப்பதற்குமென ரூபா பத்து லட்சங்களை பாராளுமன்ற உறுப்பினர் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கியிருந்தமைக்காக நன்றி பாராட்டப்பட்டது. Read more

இலங்கை இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவிற்கு எதிரான பிடியாணையை பிரிட்டனின் நீதிமன்றம் இரத்துச்செய்துள்ளது.

லண்டனில் இலங்கை தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் மீது கொலைமிரட்டல் சமிக்ஞைசெய்தார் என்ற அடிப்படையில் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிராக பிறப்பித்திருந்த பிடியாணையை வெஸ்ட்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றம் இரத்துச்செய்துள்ளது. பிரிட்டனின் வெளிவிவகார அலுவலகத்தின் தலையீடு காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் எதுவுமின்றி பிடியாணை இரத்துச்செய்யப்பட்டது என கார்டியன் தெரிவித்துள்ளது. Read more

இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட இரண்டு கடலோர ரோந்து படகுகளை சீஷெல்ஸ் நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் நேற்று முற்பகல் கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் நிறுவனத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் சீஷெல்ஸ் நாட்டுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சீஷெல்ஸுக்கு மேற்கொண்ட அரசமுறை பயணத்தின்போது வழங்கிய உறுதிமொழிக்கிணங்க இலங்கையின் அன்பளிப்பாக இந்த கடற்படை படகுகள் சீஷெல்ஸ் நாட்டுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. Read more

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள புகையிரதக் கடவையில் ரயிலுடன் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி பயணித்த ரயிலுடன் மோதுண்டே இளைஞர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நுணாவில் மேற்கைச் சேர்ந்த 24 வயதுடைய விக்னா என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள மோட்டார் சைக்கிள் திருத்தும் கடையில் தனது மோட்டார் சைக்கிளை திருத்துவதற்காக கொடுத்திருந்த நிலையில், அதனைப் பார்வையிட நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் பயணித்து கடவையைக் கடந்தபோதே விபத்து நேர்ந்துள்ளது. Read more

மன்னார் – பெற்றா பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றின் வகுப்பறை கூடம், இன்று அதிகாலை இனம் தெரியாத விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த கல்வி நிலையத்தின் நிர்வாகம், இன்றுகாலை 8 மணியளவில் குறித்த கல்வி நிலையத்தை திறந்த போது, தீப்பற்றி எரிவதைக் கண்ட நிலையில், உடனடியாகத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனால், பாரிய சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. இன்று சனிக்கிழமை அதிகாலை குறித்த கல்வி நிலையப் பகுதிக்குச் சென்றுள்ள இனந்தெரியாத நபர்கள், மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட போத்தல்களில் தீ வைத்து குறித்த கல்வி நிலையத்தின் வகுப்பறை கூடம் மீது வீசியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. Read more