இலங்கை இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவிற்கு எதிரான பிடியாணையை பிரிட்டனின் நீதிமன்றம் இரத்துச்செய்துள்ளது.

லண்டனில் இலங்கை தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் மீது கொலைமிரட்டல் சமிக்ஞைசெய்தார் என்ற அடிப்படையில் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிராக பிறப்பித்திருந்த பிடியாணையை வெஸ்ட்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றம் இரத்துச்செய்துள்ளது. பிரிட்டனின் வெளிவிவகார அலுவலகத்தின் தலையீடு காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் எதுவுமின்றி பிடியாணை இரத்துச்செய்யப்பட்டது என கார்டியன் தெரிவித்துள்ளது.பிரியங்க பெர்ணான்டோவிற்கு குறிப்பிட்ட காலப்பகுதியில் காணப்பட்ட இராஜதந்திர விடுபாட்டுரிமை குறித்து பிரிட்டனின் வெளிவிவகார அலுவலகத்துடன் கலந்தாலோசனைகளை மேற்கொண்டபின்னர் பிரதம நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகள் இன்றி அவசரஅவசரமாக தனது உத்தரவை இரத்துச்செய்துள்ளார் என கார்டியன் தெரிவித்துள்ளது.