யாழ். இளவாலை உயரப்புலம் ஸ்ரீமுருகன் முன்பள்ளியில் 2019ம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கால்கோள் விழா 28-01-2019 அன்று இடம்பெற்றபோது புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பிரதம விருந்தினராகவம் வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினரான எஸ்.கே.அச்சுதபாயன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் திரு.பா.கஜதீபன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவூம் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கொள்வனவூ செய்யப்பட்ட ரூபா ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் பெறுமதியான தளபாடங்களும் சிறுவர்களுக்கான விளையாட்டுப்பொருட்களும் முன்பள்ளி பொறுப்பாசிரியரிடம் கையளிக்கப்பட்டன.