யாழ். கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 30-01-2019 அன்று இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் திரு.அ.ஆனந்தராசா தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ த.சித்தார்த்தன் அவர்களும்,

சிறப்பு விருந்தினர்களாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் நா. சிவநேசன், சித்த ஆயள்வேத வைத்தியரும் பழைய மாணவியுமான திருமதி பூபதீஸ்வரி இரவீந்திரன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினரும் புளொட் முக்கியஸ்தருமான இராசேந்திரம் செல்வராசா (நீர்வேலி செல்வம்), வட மாகாண கல்வித் திணைக்களத்தின் ஸ்டெப்ஸ் கல்வி நிறுவனத்தின் பயிற்றுனரான திருமதி ரேணுகா பேரின்பமூர்த்தி ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். இவ் வித்தியாலயத்தின் மைதான புனரப்பிற்கும் சுற்றுமதில் அமைப்பதற்குமென ரூபா பத்து லட்சங்களை பாராளுமன்ற உறுப்பினர் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கியிருந்தமைக்காக நன்றி பாராட்டப்பட்டது.