வவுனியா பொன்னாவரசன்குளம் வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த வலுக்குன்றிய குழந்தையொன்றின் தாயாரான சிவராசா தயாநிதி என்பவருக்கு முதற்கட்டமாக 5ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இலண்டனில் வதியும் திரு. தர்மலிங்கம் நாகராஜா(பொக்கன்) அவர்கள் இதற்கான நிதியுதவியினை வழங்கியிருந்ததோடு, மாதாந்தம் அவருக்கான மேற்படி நிதியுதவியைத் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் (31.01.2019) இவ்வுதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு உறுப்பினர்களான த.யோகராஜா (பிரதேசசபை உறுப்பினர்), வே.குகதாசன்(பிரதேசசபை உறுப்பினர்), வே.சிவபாலசுப்பிரமணியம், க.மகேந்திரன் ஆகியோரும், கொடையாளி தர்மலிங்கம் நாகராஜா, பிரதேசசபை உறுப்பினர் நந்தகுமார், கட்சி அங்கத்தவர் சந்திரன், தொண்டு நிறுவனப் பிரதிநிதி யசோதரன் மற்றும் பொன்னாவரசன்குளம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் சுப்பிரமணியம், பொன்னாவரசன்குளம் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் சசிதரன், இராசேந்திரன்குளம் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சாந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.