அமெரிக்காவின் பாதுகாப்பு பிரிவுடன் அரசாங்கம் உடன்படிக்கை செய்துகொள்ளவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். அரசாங்கம் ஒருபோதும் அதுபோன்ற உடன்படிக்கையை செய்துகொள்ளவில்லை என்று பிரதமர் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.