தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணையை இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்காமல் இருக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது. நேற்று (06) இரவு ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணையை இன்று விவாதத்திற்கு எடுக்குமாறு நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல கருத்து வெளியிட்டுள்ளார். இருப்பினும் இதன்போது எதிர்கட்சியினர் குறித்த பிரேரணை எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.எவ்வாறாயினும் குறித்த விவாதத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டு இன்றை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலிலும் அது குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய அரசாங்கம் தொடர்பான வாக்கெடுப்பிற்கு கட்டாயம் ஆதரவளிக்குமாறு ஆளும் கட்சியில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் கட்சியின் பிரதம ஒருங்கிணைப்பாளர், அமைச்சர் கயந்த கருணாதிலக எழுத்து மூலம் நேற்று அறிவித்திருந்தார்.