Header image alt text

கிராம எழுச்சித் திட்டத்தின்கீழ் புளொட் தலைவரும் யாழ் மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா பத்து லட்சம் நிதியில் ஆவரங்கால் நடராஜஇராமலிங்க வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானம்

முழுமையாக புனரமைக்கப்பட்டு 31-01-2019 அன்று பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. Read more

யா/வதிரி திரு இருதயக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் இறுதி நிகழ்வுகள் 01-02-2019 அன்று கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. கல்லூரியின் அதிபர் திரு. இ.இராகவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் அவர்களும் கௌரவ விருந்தினராக கரவெட்டி பங்குத்தந்தை அருட்பணி ப. அன்ரனிப்பிள்ளை அவர்களும் சிறப்பு விருந்தினராக பொறியியலாளர்(பழைய மாணவர்) ஜோன் ஜெயந்தன் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கோரிக்கைக்கமைய தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் விசேட நிதிஒதுக்கீடாக ரூபா 10லட்சம் நிதியில் முழுமையாக புனரமைக்கப்பட்ட கரவெட்டி யாஃவதிரி திரு இருதயக் கல்லூரியின் விளையாட்டு மைதானம் பாராளுமன்ற உறுப்பினரால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. Read more

துபாயில் பிரபல பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துர மதூஷ் உட்பட கைது செய்யப்பட்டவர்களில் இராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று பொலிஸ்மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். மாகந்துர மதூஷ் கைது செய்யப்பட்ட சமயத்தில் இராஜதந்திர கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்ட நபர் தனது ஊடக இணைப்புச் செயலாளர் என்று பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். Read more

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம், வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கா கேடரிங் நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா தனியார் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் முறைக்கேடுகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிக்காலம் 2019 ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 2006 ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் 2018 ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த நிறுவனங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் முறைக்கேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதியினால், 2018 பெப்ரவரி 14 ஆம் திகதி இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. Read more