யா/வதிரி திரு இருதயக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் இறுதி நிகழ்வுகள் 01-02-2019 அன்று கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. கல்லூரியின் அதிபர் திரு. இ.இராகவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் அவர்களும் கௌரவ விருந்தினராக கரவெட்டி பங்குத்தந்தை அருட்பணி ப. அன்ரனிப்பிள்ளை அவர்களும் சிறப்பு விருந்தினராக பொறியியலாளர்(பழைய மாணவர்) ஜோன் ஜெயந்தன் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கோரிக்கைக்கமைய தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் விசேட நிதிஒதுக்கீடாக ரூபா 10லட்சம் நிதியில் முழுமையாக புனரமைக்கப்பட்ட கரவெட்டி யாஃவதிரி திரு இருதயக் கல்லூரியின் விளையாட்டு மைதானம் பாராளுமன்ற உறுப்பினரால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.