Header image alt text

மன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னரே வெளிவரும் என சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.

மன்னார் மனித புதைகுழியில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டு அமெரிக்காவிற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு மாதிரிகளின் ஆய்வு அறிக்கை தொடர்பாக இன்று (11) அவர் கருத்துக் கூறுகையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு 6 பொதிகள் செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு மறுநாள் 24 ஆம் திகதி விமானம் மூலம் அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு 25 ஆம் திகதி புளோரிடாவில் உள்ள கூடத்திற்கு கார்பன் பரிசோதனைக்காக கையளிக்கப்பட்டது. Read more

பேராதனை மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழங்களில் கிளைகளை மாலைதீவில் அமைப்பதற்கு அந்நாட்டு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். வரலாற்றில் முதல் முறையாக இலங்கை பல்கலைக்கழகங்களின் கிளைகள் வெளிநாட்டில் அமைக்கப்படுவதால், எமது கல்வித்தரம் சர்வதேச தரப்படுத்தலுக்கு மேம்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கண்டி, யஹலதென்ன முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு நேற்று பாடசாலை மைதானத்தில் நடைபெற்றபோது, அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். Read more

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட 7 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என பிரதிவாதிகளினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, பிரதம நீதியரசரினால் வழங்கப்பட்ட கட்டளையின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழுவின் தலைவர் சம்பத் அபேகோன் தெரிவித்துள்ளார். இதனால் குறித்த வழக்கை விசாரிக்க தங்களுக்கு இருக்கும் அதிகாரம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை குறிப்பிட முடியாது என கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். Read more