இலங்கையில், ஜப்பான் நாட்டு உதவியுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் நீர் வழங்கல் திட்டங்கள் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவக் கருத்திட்டங்கள் தொடர்பாக, ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமை, உயர்கல்வி அமைச்சிலுள்ள அலுவலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

மேலும்,அடுத்த மாதம் கொழும்பில் நடத்தப்படவுள்ள நீர் வழங்கல், கழிவு நீர் முகாமைத்துவ கருத்திட்டங்களின் செயலமர்வில் ஜப்பானிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கொங்கிரீட் கொள்கலன்களின் பயன்பாடு தொடர்பான கருத்தரங்குக்கு அதிதியாகக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அத்துடன், உயர் கல்வித் துறையில் ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான தொடர்பு சம்பந்தமாகவும், இதன்போது கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.