கல்வியியற் கல்லூரிகளுக்காக, மாணவர்கள் தபால் மூலமும் விண்ணப்பங்களை அனுப்புவதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்களை, இணையத்தளம் ஊடாக விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்கள் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, கல்வியியற் கல்லூரி ஆணையாளர் நாயகம் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார். இணையத்தளம் ஊடாக சரியான முறையில் விண்ணப்பங்களை அனுப்ப தவறும் மாணவர்களுக்கு மாத்திரமே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, அவர் கூறியுள்ளார்.