Header image alt text

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வட்டுக்கோட்டைத் தொகுதி அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு கடந்த ஞாயிறன்று(10-02-2019) கட்சியின் தொகுதி அமைப்பாளர் ந.கணேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

சித்தன்கேணியில் இடம்பெற்ற இச்சந்திப்பில் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ த.சித்தார்த்தன் அவர்களும் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான திரு. பா.கஜதீபன் அவர்களும் கலந்துகொண்டு தொகுதியின் தேவைப்பாடுகள், அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினர். Read more

இலங்கை அரசாங்கம் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் முக்கியமான அடிகளை எடுத்து வைத்திருப்பதாக கனடா தெரிவித்துள்ளது. கனடாவின் ஆசிய பசுபிக் வலயத்துக்குப் பொறுப்பான பூகோளவிவகார அமைச்சர் கலாநிதி டொனால்ட் பொபயாஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தில் இலங்கையின் சுதந்திரத் தின நிகழ்வு இடம்பெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைக் கூறியுள்ளார். இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு கனடா தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இனப்பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாதுள்ளமை, இலங்கையுடனான உறவினை விருத்தி செய்துக் கொள்வற்கு அடிப்படையான தடையாக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்து-பசுவிக் கட்டளைப் பிரதானி அட்மிரல் ஃபிலிப் டேவிட்சன், செனட் சபையின் ஆயுத சேவைகள் குழுவின் காங்கிரஸ் கூட்டத்தில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமான இராணுவத் தொடர்பு அதிகரித்து வருகிறது. எனினும் நாட்டின் அரசியல் குழப்பநிலை மற்றும் இனப்பிரச்சினை என்பன இந்த தொடர்புகளை மேலும் விருத்தி செய்ய தடையாக உள்ளது. Read more

வட மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் வகையில் கொக்கிளாய் பாலம் அமைக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு – திருகோணமலை, புல்மோட்டையை இணைக்கும் வகையில் இந்த பாலம் அமைக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு 9 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இதற்கான 41. 5 மில்லியன் யூரோ கடனுதவியை செக் குடியரசின் ஏற்றுமதி வங்கி வழங்கவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 1 கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கப்படவுள்ள இந்த கொக்கிளாய் பாலத்தினூடாக முல்லைத்தீவிற்கும் திருகோணமலைக்கும் இடையிலான தூரத்தை 100 மீட்டர் வரை குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக மீள்குடியேற்ற அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை உள்ளிட்ட நாடுகளின் ஏதிலிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமை அவுஸ்திரேலிய அரசாங்கம் மீண்டும் திறக்கவுள்ளது. அந்த நாட்டின் பிரதமர் ஸ்கொட் மொரிசன் இதனை அறிவித்துள்ளார்.

நவுரு மற்றும் மானஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏதிலிகள் சுகவீனமுறும்போது, அவர்கள் அவுஸ்தரேலியாவிற்கு சென்று மருத்துவ வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையிலான சட்ட மூலம் ஒன்று அந்த நாட்டின் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. எதிர் கட்சிகளான பசுமை கட்சியும், தொழிற்கட்சியும் இணைந்து இச் சட்டமூலத்தை வெற்றிப்பெறச் செய்தன. Read more