இலங்கையில் இனப்பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாதுள்ளமை, இலங்கையுடனான உறவினை விருத்தி செய்துக் கொள்வற்கு அடிப்படையான தடையாக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்து-பசுவிக் கட்டளைப் பிரதானி அட்மிரல் ஃபிலிப் டேவிட்சன், செனட் சபையின் ஆயுத சேவைகள் குழுவின் காங்கிரஸ் கூட்டத்தில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமான இராணுவத் தொடர்பு அதிகரித்து வருகிறது. எனினும் நாட்டின் அரசியல் குழப்பநிலை மற்றும் இனப்பிரச்சினை என்பன இந்த தொடர்புகளை மேலும் விருத்தி செய்ய தடையாக உள்ளது. அதேநேரம், ஹம்பாந்தொட்டை துறைமுகத்தை சீனாவிற்கு இலங்கை வழங்கியமை சர்வதேச அளவில் கரிசனைக்குரிய விடயமாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.