ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வட்டுக்கோட்டைத் தொகுதி அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு கடந்த ஞாயிறன்று(10-02-2019) கட்சியின் தொகுதி அமைப்பாளர் ந.கணேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

சித்தன்கேணியில் இடம்பெற்ற இச்சந்திப்பில் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ த.சித்தார்த்தன் அவர்களும் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான திரு. பா.கஜதீபன் அவர்களும் கலந்துகொண்டு தொகுதியின் தேவைப்பாடுகள், அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினர். கிராமசேவகர் பிரிவுரீதியாக மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்திப்பணிகளை இனங்கண்டு அவற்றினை அவசியத்தேவையின் அடிப்படையில் முன்னுரிமைப்படுத்துதல் மற்றும் கட்சியின் செயற்திட்டங்களை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடிய இந்நிகழ்வில் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கமளித்தார்.