Header image alt text

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், திங்கட்கிழமை (25), வடமாகாணம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஜனநாயக மக்கள் முன்னணியும் ஆதரவு வழங்கியுள்ளன.
இந்த ஹர்த்தாலுக்கு, பல தரப்பினரும் ஆதரவு வழங்க முன்வந்த நிலையிலேயே, தற்போது, தமிழ் தலைமைகளும் ஆதரவு வெளியிட்டுள்ளனர். Read more

அரசியலமைப்பு பேரவையில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவாகவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
அரசியலமைப்பு பேரவையில் சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் பிரதிநிதிகள், மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள் ஆகியோரே தற்போதுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
இவர்களைத் தவிர, சமல் ராஜபக்ஸ இருந்ததாகவும் அவரும் இராஜினாமா செய்துவிட்டதாகவும் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார். Read more

நான்கரை வருடங்கள் ஆகியும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
லங்கா சம சமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண யாழ். ஊடக அமையத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைக் குறிப்பிட்டார்.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு கண்டு, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்குறுதியளித்துள்ளது. Read more