காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், திங்கட்கிழமை (25), வடமாகாணம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஜனநாயக மக்கள் முன்னணியும் ஆதரவு வழங்கியுள்ளன.
இந்த ஹர்த்தாலுக்கு, பல தரப்பினரும் ஆதரவு வழங்க முன்வந்த நிலையிலேயே, தற்போது, தமிழ் தலைமைகளும் ஆதரவு வெளியிட்டுள்ளனர்.காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு, அன்று தொடக்கம் இன்று வரை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கி வருவதாகவும் அவர்களின் கோரிக்கைகள், நீதியானவை என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, வடக்கு ஹர்த்தால் போராட்டத்துக்கு மலையக இளம் ஊடகவியலாளர் ஒன்றியம், மலையக சமூக ஆய்வு மையம், மலையக உரிமைக்குரல், தமிழ் இளம் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியனவும் ஆதரவு தெரிவித்துள்ளன.