Header image alt text

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரொருவரின் ஆதரவாளர்கள் என நம்பப்படும் கறுப்பு சட்டை அணிந்த சிலர் போராட்டத்தை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டத்துடன், ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்களை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (25) திங்கட்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர். Read more

கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் இன்று ஆரம்பமாகும் ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வை முன்னிறுத்தியும் வடகிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (25) திங்கட்கிழமை கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில் பெருமளவான மக்கள் திரண்டு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். Read more

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் இன்று (25) ஜெனீவாவில் ஆரம்பமாகிறது.

மார்ச் மாதம் முதலாம் திகதி வரையில் இந்த கூட்டுத் தொடர் இடம்பெற உள்ளது.

2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் இந்த கூட்டுத் தொடரின் போது கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இலங்கை தொடர்பில் மேலும் பல அறிக்கைகளும் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.