ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ( புளொட் ) இன் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை 24.02.2019 அன்று கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
இந் நிகழ்வின் போது, ‘புலம்பெயர்ந்து வாழும் கழக உறுப்பினர்களின் உதவித் திட்டத்தின்’ கீழ் கழக ஜேர்மன் கிளை உதவியாக கழக உறுப்பினர்கள் மூவரினது பிள்ளைகளுக்கு மிதிவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.
இரத்தினம் சின்னையா ( கலிபர் ), இளையதம்பி சண்முகம் ( பவன் ), கதிர்காமத்தம்பி சுந்தரலிங்கம் ( சுரேஷ் ) ஆகியோருடைய பிள்ளைகள் மூவரினது கல்விச் செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் மேற்படி மிதிவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.
இம் மிதிவண்டிகளுக்கான நிதியினை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ( புளொட் ) இன் ஜெர்மன் கிளை அமைப்பாளர் திரு. நல்லதம்பி பவானந் அவர்கள் வழங்கியிருந்தார்.