வவுனியா, நெளுக்குளம், காத்தான் கோட்டம் பகுதியில் இடம்பெற்ற, அமரர்கள் நினைவான 22 வது ஆண்டு விளையாட்டுப் போட்டி இறுதி நிகழ்வுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அமைப்பின் ஜேர்மன் கிளை நிதி உதவி –

வவுனியா மாவட்டத்தில் நெளுக்குளம் பிரதேசத்தை அண்டி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அமைப்பினரால் ஏற்படுத்தப்பட்ட ‘காத்தான் கோட்டம்’ பகுதியில் இடம்பெற்ற, அமரர்கள் நினைவான 22வது வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுக்கு, புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளை உறுப்பினர்களால் ரூ 40,000/- நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.நியூ பைfற் விளையாட்டுக் கழகத்தினராலும், இளையநிலா இளைஞர் கழகத்தினராலும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அமைப்பிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந் நிதி வழங்கப்பட்டுள்ளது.

‘புலம்பெயர்ந்து வாழும் கழக உறுப்பினர்களின் உதவித் திட்டத்தின்’ கீழ் மேற்படி நிதியினை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ( புளொட் ) இன் ஜெர்மன் கிளை உறுப்பினர்கள் வழங்கியிருந்தார்கள்.