காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று மன்னாரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்ததோடு, தமது கோரிக்கை அடங்கிய மகஜரை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பியுள்ளனர்.

மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் இன்றுகாலை 10 மணியளவில் மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் ஊர்வலம் ஆரம்பமாகி மன்னார் மனித புதை குழி அகழ்வு பணிகள் இடம் பெறும் பகுதியை வந்தடைந்தது. Read more