Header image alt text

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமையை வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்படுமென்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் உள்ள 915 இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட அமைச்சர், வெளிநாடுகளில் மாறுபட்ட அனுபவங்களைக் கொண்டுள்ள நபர்களுக்கு மீண்டும் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வதற்கான சந்தர்ப்பம் இந்த வேலைத்திட்டத்தன் மூலம் கிட்டுவதாகக் குறிப்பிட்டார். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, அவுஸ்திரேலியா, சுவீடன், நியுசிலாந்து, டென்மார்க், சுவிற்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பிரஜாவுரிமையைப் பெற்றுள்ள இலங்கையர்களுக்கு அமைச்சர் வஜிர அபேவர்த்தன இரட்டைப் பிரஜாவுரிமைச் சான்றிதழை வழங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் – மீசாலை – புத்தூர் வீதி – மட்டுவில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

கிடுகு ஏற்றியவாறு பயணித்த லாண்ட்மாஸ்ரருடன் பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதாலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில், விசுவமடுவைச் சேர்ந்த 24 வயதுடைய ரஜீவன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த மூவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதன வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். Read more

சித்திரவதையை தடுப்பு சம்பந்தமான தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைக்குழு ஏப்ரல் முதல் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி அவர்கள் ஏப்ரல் 2 முதல் 12 வரை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. நான்கு பேர் கொண்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதுடன், மோல்டோ, மொரிஷியஸ், சைப்ரஸ் மற்றும் பிலிப்பைன்ஸின் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 18 வது முதல் 22ம் திகதி வரை இடம்பெற்ற இரகசிய கூட்டத் தொடர் ஒன்றில் சித்திரவதையை தடுப்பு சம்பந்தமான தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைக்குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

வெளிநாட்டு தூதுவர் பதவிகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பரிந்துரை செய்யப்பட்ட பாராளுமன்ற உயர்பதவிகள் குழு அனுமதி வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

வெளிவிவகார அமைச்சு இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு, பாராளுமன்ற உயர் பதவிக்குழு பதினான்கு தொழில் இராஜதந்திரிகளின் முன்மொழிவுகளை ஏற்றுக்கொண்டுள்ளது. நாட்டு சேவை மற்றும் சங்கங்களுக்கு நியமிக்கப்பட்ட அல்லது முன்மொழியப்பட்ட நபர்களின் தகுதியை பரீட்சிப்பதற்கான இலங்கை பாராளுமன்றத்தின் உயர்பதவிகளுக்கான குழு (உயர்பதவிகள் குழு) வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களின் தலைவர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் முன்மொழியப்பட்ட பதினான்கு தொழில் இராஜதந்திரிகளின் நியமனங்களை புதன்கிழமை 27 மார்ச் ஏற்றுக்கொண்டிருக்கின்றது. Read more

மட்டக்களப்பு வந்தாறுமூலை சந்தைக்கு அருகில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி இரண்டு மோட்டர் சைக்கிள்கள் தீப்பற்றி எரிந்ததில் மூவர் உயிரிழந்தள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு விபத்து இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

வேப்பவுஸ் வீதி பலாச்சோலை வந்தாறுமூலையைச் சேர்ந்த 22 வயதுடைய மோகன் மயூரன், வேப்பவுஸ் 3 ம் குறுக்கு வீதி பலாச்சோலை வந்தாறுமூலையைச் சேர்ந்த 23 வயதுடைய முருகுப்பிள்ளை பவித்திரன் ஆகியோர் இவ்வாறு உயிரிழந்ததுடன் தீப்பற்றி எரிந்தவர் அடையாளம் காணப்படவில்லை. வாழைச்சேனை பகுதியில் இருந்து மட்டக்களப்பை நோக்கி 4 பேர் இரண்டு மோட்டார் சைக்கிள்களை சமாந்தரமாக ஓட்டிச் சென்று கொண்டிருந்த போது இரு மோட்டர் சைக்கிள்களும் விபத்துக்கள்ளான நிலையில் பின்னால் வந்த மோட்டர் சைக்கிளில் வந்த இருவரும் அதன் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. Read more

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நாளை 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோகசபை கூறியுள்ளது. நாளை காலை 09.00 மணிமுதல் நாளை மறுநாள் காலை 09.00 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

மின்சார சபையின் திடீர் மின்வெட்டு மற்றும் அத்தியாவசிய திருத்தப் பணிகளுக்காக இவ்வாறு காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது. Read more

2018ம் ஆண்டுக்கான, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய 527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில், 1,315 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்ததாகவும், அவற்றுள் 738 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவுப்பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து நிலவிவரும் வறட்சியினால் 12 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

நாட்டின் பல பகுதிகளின் இன்னும் வறட்சியான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, வடமேல், வடக்கு, கிழக்கு, மத்திய, மேல், ஊவா உள்ளிட்ட பல மாகாணங்கள் இந்த வறட்சியான வானிலையை எதிர்கொண்டு வருவதாகவும் இந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. Read more

சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் புனர்வாழ்வு அதிகாரிகள் நியமனத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. இது தொடர்பாக வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட இருப்பதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக 1068 ஆண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 110 பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 2 ஆம் நிலை ஆண் ஜெயிலர் பதவிக்கும் பெண் ஜெயிலர் பதவிக்காக 10 பேரும் புனர்வாழ்வு ஆண் அதிகாரிகளாக 15 பேரும் பெண் புனர்வாழ்வு அதிகாரிகளாக மூவரும் புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். Read more

அமெரிக்காவின் தெற்கு டெக்ஸாஸ் எல்லை ஊடாக இலங்கை ஏதிலிகள் சிலர் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை அவர்கள் கைது செய்யப்பட்டதாக அமெரிக்காவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அமெரிக்க நாடொன்றில் இருந்து அவர்கள் ஏனைய நாடுகளின் ஏதிலிகளுடன் இணைந்து எல்லைத்தாண்ட முற்பட்டுள்ளனர். கைதானவர்கள் டெக்ஸாஸ் எல்லைப் பாதுகாப்பு சபை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.