Header image alt text

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித்சிங் இலங்கை தலைவர்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் அவர் சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை சம்பந்தமாக விளக்கமளிப்பதற்காக தரஞ்சித் சிங் இந்த சந்திப்பை நடத்தியுள்ளார். பாகிஸ்தானுடன் அரசியல் ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ எதுவித பிரச்சினைகளும் இந்தியாவுக்கு இல்லை என்று அவர் இதன்போது கூறியுள்ளார்.

சுவிஸ் அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சினுடைய சமஷ்டி தொடர்பான திணைக்களத்தின் சிரேஷ்ட ஆலோசகர் Martin Stuerzinger யாழ். ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று நண்பகல் ஆளுநர் அலுவலகத்தில் சந்திந்தார்.

இந்த சந்திப்பின் போது வட மாகாண மக்களின் தற்போதைய நிலைகுறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், இம்மக்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்தக்கூடிய வழிமுறைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது. வட மாகாணத்தில் நிலவும் காணி, நீர், வீடு மற்றும் இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.