சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி 5ஆம் திகதி செவ்வாய்க் கிழமை வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். குறித்த தினத்தில் தனியார் கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கான விடுமுறையை வழங்குமாறும் ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்த விடுமுறை தினத்திற்கான மாற்று பாடசாலை தினம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என ஆளுனரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. (அரச தகவல் திணைக்களம்)