கச்சதீவு அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு உள்நாட்டு படகுகளுக்கு அனுமதி வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. அத்துடன், மீனவர்களின் வள்ளங்களுக்கும் அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கச்சதீவு அந்தோனியார் திருவிழா எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு மீனவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, அவர்களின் படகுகளுக்கு அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள கலந்துரையாடலில் எத்தனை படகுகளை விடுவிப்பது என்பது தொடர்பிலான இறுதி முடிவுகள் எட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை திருவிழாவிற்காக 2,215 யாத்திரிகர்களை அழைத்துவருவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.