மஹா சிவரார்த்திரி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 5ம் திகதி, நாளை மறுதினம் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாவினால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு இது குறித்த பணிப்புரை விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நிஷாம் தெரிவித்தார். அன்றைய தினத்திற்கான பாடசாலை நடவடிக்கைகள் பிரிதொரு தினத்தில் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.