மன்னாரில் இருந்து யாழ்பாணம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பயனித்த இளைஞர் குழு எதிரில் வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிர் இழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் இருந்து நேற்று மதியம் மூன்று மோட்டார் சைக்கிள்களில் 6 பேர்கள் கொண்ட இளைஞர் குழு யாழ்பாணம் நோக்கி பயணித்த வேலையில் பூநகரி பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் எதிரே வந்த உழவு இயந்திரத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளனர். குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மன்னார் அடம்பன் பகுதியைச் சேர்ந்த ஜாக்சன் எனும் இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். அதே நேரத்தில் பயணித்த மேலும் 3 பேர்கள் கவலைக்கிடமான நிலையில் யாழ்பாணம் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அணுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.