17 கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டமொன்றில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் தமது பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் அறிவித்திருந்தது.

மேலும், நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றும் நடாத்தப்படும் என அதன் பொதுச் செயலாளர் கமல் கித்சிறி தெரிவித்திருந்தார். இதேவேளை திட்டமிட்டப்படி இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என தொடரூந்து சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட இதனை தெரிவித்துள்ளார். 45 வயதை அண்மித்த 12 சாரதிகளை சேவைக்கு இணைத்துக் கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தமது கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டால் பணிப்புறக்கணிப்பு கைவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.