வவுனியா ஆசிகுளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் பஸ் உட்பட வாகனங்கள் வேகமாக செல்வதால் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

எனவே அவ்வீதியில் பாதுகாப்புத்தடை ஒன்றினை ஏற்படுத்தித்தருமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர். சிதம்பரபுரம் மயிலங்குளம் ஊடாக வவுனியா செல்லும் பஸ்கள் உட்பட பல வாகனங்கள் அவ்வீதியால் அதிக வேகமாகச் செல்வதனால் ஆசிகுளம் பகுதியிலுள்ள அரசினர் தமிழக் கலவன் பாடசாலைக்கு மாணவர்கள் சென்றுவருவதில் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதுடன் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. பாடசாலை நேரத்திலும் இவ்வீதியூடாகச் செல்லும் பஸ்கள் அதிக வேகத்துடன் செல்கின்றன. இது குறித்து பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் எவ்விதமான நடவடிக்கையும் இன்றுவரை மேற்கொள்ளப்படவில்லை.

எனவே பாடசாலை முன்பாகவுள்ள வீதியில் வாகன வேகத்தைக் கட்டுப்படுத்தவும் மாணவர்களின் பாதுகாப்புக்காகவும் பாதுகாப்புத் தடை ஏற்படுத்தித்தருமாறு மக்கள் தெரிவித்துள்ளனர்.