Header image alt text

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வே நாட்டின் ராஜாங்க செயலாளர் மெரியானா ஹேகன் இன்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்வதாக கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது.

அங்கு அவர் நிலக்கண்ணி வெடி அகற்றும் முகமாலை பிரசேத்துக்கு சென்று பார்வையிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முக்கிய சந்திப்புகளையும் அவர் அங்கு நடத்துவார் என்று கூறப்படுகிறது. நேற்று நோர்வே நாட்டின் ராஜாங்க செயலாளர் மெரியானா ஹேகன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திருந்த நிலையில், இலங்கையில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்காக 7 மில்லியன் டொலர்கள் நிதியை வழங்குவதாக அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிட்டுக் கூறத்தக்கது.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நேவி சம்பத் என்ற நிலந்த முணசிங்க உள்ளிட்ட ஆறு பேரும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை இன்றைய தினம் கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி ஓய்வுபெற்ற அத்மிரல் வசந்த கரன்னகொட உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சிரேஸ்ட சட்டத்தரணி ஜனக பண்டார, நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். Read more

ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் தனக்கு பதிலாக மூவரை அனுப்பிவைக்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் இந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவுள்ளனர். Read more

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் காபன் பரிசோதனை அறிக்கையானது சட்டபூர்வமாக இன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட சந்தேகத்துக்கிடமான மனித எச்சங்கள் கடந்த மாதம் கார்பன் பரிசோதனைக்காக சட்டவைத்திய அதிகாரி தலைமையில் புளோரிடாவில் உள்ள ஆய்வு கூடத்திற்கு ஆய்வுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. Read more

மட்டக்களப்பு சவுக்கடி பகுதியில் சந்தேகத்துக்குரிய மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பொலிஸார் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த பகுதியில் வீட்டுப் பாவனைக்கான கிணறு ஒன்றை தோண்ட முற்பட்ட வேளையில் இந்த மனித எச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்த மேலதிக விசாரணைக்காக தமது காவற்துறை குழு ஒன்று சம்பவ இடத்துக்கு சென்றிருப்பதாக மட்டக்களப்பு காவற்துறை நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தள்ளார்.

ரயில் கடவைக்கு அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலியை அகற்றுமாறு கோரிய ரயில்வே திணைக்களம் பாதையையும் தடை செய்துள்ளது வவுனியா ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதியில் நான்கு உயிர்களைக்காவு கொண்ட பாதுகாப்பற்ற புகையிரதக்கடவைக்கு அண்மையில் புதிதாக அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலி சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வவுனியா ரயில்வே திணைக்களத்தினால் பாதுகாப்பு வேலியை அகற்றுமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலி தற்போது அகற்றப்பட்டுள்ளது. அப்பாதை மக்கள் போக்குவரத்திற்கு தண்டவாளம் போட்டு போக்குவரத்து மேற்கொள்வதற்கு ரயில்வே திணைக்களத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது. Read more

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் நேற்று சந்தித்துள்ளார். சிவராத்திரி தினமான நேற்று தாம் அவரை சந்தித்தமை ஆசீர்வாதமாக அமைந்திருந்ததாக, அலைனா டெப்லிட்ஸ் தமது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது நாட்டின் தற்போதைய சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கண்ணகிபுரம் பகுதியில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் வெடிபொருட்கள் இருப்பதாக காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து நீதிமன்ற அனுமதியுடன் அங்கு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்படி அங்குள்ள வாய்க்கால் ஒன்றில் இருந்து சில வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார் – பெரியமடு இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரரொருவர் ஆயுதங்கள் தொகையுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். ரிதிமாலியத்த பிரதேசத்தில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து குறித்த ஆயுத தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

தானியங்கி துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 273 தோட்டாக்களும் விமான தாக்குலுக்கு பயன்படுத்தப்படும் தானியங்கி துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 73 தோட்டாக்களும் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யாழ், மட்டுவில் வின்சன் வீதியிலுள்ள வீடு ஒன்றின்மீது இன்று அதிகாலை 12.15 மணியளவில் வாள் மற்றும் கோடாரிகளால் வீடொன்றின்மீது சரமாரியான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடாத்திய குழுவினர் மட்டுவில் சந்தியில் நின்று தொடர்ந்தும் அட்டகாசம் செய்து வந்ததன் காரணத்தினால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. சாவகச்சேரிப் பொலிஸார் மற்றும் 119 அவசரப் பொலிஸாருக்கு அறிவித்தல் கொடுத்தும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் உரிய நேரத்தில் செல்லவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. Read more