நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா பிரதேச சபையால் சிவனொளிபாத மலைக்கு பிரவேசிக்கும் வாயிலில் ‘சிவபாதம்’ எனப் பெயரிடுவதாக எடுக்கப்பட்ட முடிவை உடன் இடை நிறுத்தும்படி மத்திய மாகாண ஆளுநர் மைந்திரி குணரத்ன உத்தரவிட்டுள்ளார்.

எந்த ஒரு தரப்பினருடனும் கலந்துரையாடாது மேற்படி பெயர் மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடன் இடை நிறுத்தும்படியும் அவர் அறிவித்துள்ளார். ஊடகங்கள் மூலம் தாம் இதனைத் தெரிந்து கொண்டதாகவும் அதன் பின் இது விடயமாகத் தேடிப்பார்த்த போது அரச நிறுவனங்கள் அல்லது தொடாபுடைய அமைப்புக்களுடன் கலந்தாலோசிக்காது தனி முடிவில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே உள்ளுராட்சி மாகாண சபை ஆணையாளர் ஊடாக இது விடயமாக மஸ்கெலிய பிரதேச சபைக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த வருடம் தெல்தெனியாவில் இடம்பெற்றது போன்ற இனமுரண்பாடுகளை மேலும் மத்திய மாகாணத்தில் ஏற்படுத்த தாம் இடமளிக்கப்போவதில்லை என்றும் இவ்வாறு இன முறுகல்களுக்கு வழி சமைக்கும் விடயங்களில் அவதானம் வைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே தொடர்புடைய தரப்புக்களுடன் கலந்தாலோசித்தே தேவைப்படுமிடத்து மாற்றங்கள் செய்ய முற்படுதல் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.