சர்வதேச மகளிர் தினத்துக்கு அமைவாக இன்று முதல் 7அலுவலக தொடரூந்துகளில் பெண்களுக்கான பயணபெட்டிகள் பயன்படுத்தப்படும் என்று போக்குவரத்து மற்றும் வான் சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பொது போக்குவரத்து சேவைகளில் பெண்கள் முகங்கொடுக்கும் சிரமங்கள் மற்றும் பிரச்சினைகளில் இருந்து விடுவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய காலை நேரங்களில் மீறிகம, ரம்புக்கணை, பொல்காவலை மற்றும் மஹவ ஆகிய தொடருந்து நிலையங்களில் இருந்து புறப்படும் அலுவலக தொடருந்துக்களில் மகளீருக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, புத்தளம் மற்றும் காலி ஆகிய தொடருந்து நிலையங்களில் இருந்து காலை வேளைகளில் மருதானையை நோக்கி பயணிக்கும் தொடருந்துக்களிலும் பெண்களுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்பாடானது எதிர்காலத்தில் சகல தொடருந்து சேவைகளிலும் இணைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன கூறியுள்ளார்.