யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இன்று அதிகாலை தனங்களப்பில் உள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் விசேட குற்றத் தடுப்பு பிரிவு அவரை கைது செய்துள்ளது. அவரிடமிருந்து 2 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தலைமறைவாகியிருந்த அவர் தனங்களப்பில் உள்ள வீடொன்றில் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது அவர் தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார்.