அமெரிக்காவின் இணை அனுசரணையுடன் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசத்தை கோரும் பிரேரணை ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளது.

வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நிரந்தமானதும், நிலையானதுமான நல்லிணக்க முறைமைமை நடைமுறைப்படுத்த இலங்கையினது பொறுப்புகூறல் மற்றும் கண்காணிப்பு என்பவற்றை தொடர்சியாக வெளிப்படுத்த 2015 ஒக்டோபர் முதலாம் திகதி நிறைவேற்றப்பட்ட 30/1 யோசனைக்கான காலத்தை நீடிப்பதற்கான பிரேரனை முன்வைக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2015 ஆம் ஆண்டு இலங்கையுடன் இணைந்து 30/1 யோசனையை கொண்டு வந்த அமெரிக்கா தற்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையிலிருந்து விலகியிருப்பதன் காரணமாக குறித்த கால அவகாசம் கோரும் பிரேரணைக்கு இணை அனுசரணையை பெற்று கொள்வதற்காக ஐக்கிய அரபு ராஜ்ஜியத்துடன் இலங்கை கைகோர்க்கவுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.