Header image alt text

சர்வதேச மகளிர் தினத்துக்கு அமைவாக இன்று முதல் 7அலுவலக தொடரூந்துகளில் பெண்களுக்கான பயணபெட்டிகள் பயன்படுத்தப்படும் என்று போக்குவரத்து மற்றும் வான் சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பொது போக்குவரத்து சேவைகளில் பெண்கள் முகங்கொடுக்கும் சிரமங்கள் மற்றும் பிரச்சினைகளில் இருந்து விடுவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய காலை நேரங்களில் மீறிகம, ரம்புக்கணை, பொல்காவலை மற்றும் மஹவ ஆகிய தொடருந்து நிலையங்களில் இருந்து புறப்படும் அலுவலக தொடருந்துக்களில் மகளீருக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. Read more

அமெரிக்காவின் இணை அனுசரணையுடன் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கான கால அவகாசத்தை கோரும் பிரேரணை ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளது.

வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நிரந்தமானதும், நிலையானதுமான நல்லிணக்க முறைமைமை நடைமுறைப்படுத்த இலங்கையினது பொறுப்புகூறல் மற்றும் கண்காணிப்பு என்பவற்றை தொடர்சியாக வெளிப்படுத்த 2015 ஒக்டோபர் முதலாம் திகதி நிறைவேற்றப்பட்ட 30/1 யோசனைக்கான காலத்தை நீடிப்பதற்கான பிரேரனை முன்வைக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இன்று அதிகாலை தனங்களப்பில் உள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் விசேட குற்றத் தடுப்பு பிரிவு அவரை கைது செய்துள்ளது. அவரிடமிருந்து 2 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தலைமறைவாகியிருந்த அவர் தனங்களப்பில் உள்ள வீடொன்றில் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டது. Read more