கடந்த 2017ஆம் ஆண்டு சிவனொளிபாத மலை அடிவாரத்தில் குறிப்பிட்ட சிலரால் சிவனொலிபாத மலையின் பெயர் மாற்றம் செய்யபட்டது.

அது அவ்வாறு இருக்கவே மஸ்கெலியா பிரதேசசபையின் அனைத்து உறுப்பினர்களும் ஒட்டு மொத்தமாக சபை ஒன்று கூடலின்போது ஏகமனதாக தீர்மானம் மேற்கொண்டு சபை அங்கீகாரத்துடன் கடந்த காலங்களில் இருந்ததை போல் சிங்கள மொழியில் ‘சிரிபாதய’ என்றும், தமிழ் மொழியில் ‘சிவனொளிபாதமலை’ என்றும் ஆங்கில மொழியில் ‘சிரிபாதய’ என்றும் பெயர்களை உள்ளடக்கியதாக பெயர் பலகை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில்; இங்கு இன வெறியர்களால் இனவாதம் தூண்டிவிடப்பட்டுள்ள நிலையில் இது விடயமாக மஸ்கெலியா இந்து மாமன்ற செயலாளர் ஜனாதிபதி காரியாலய செயலாளருக்கு தொலைபேசி வாயிலாக அறிவித்ததை தொடர்ந்து அவர் உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

மேலும் அவர் தொலைபேசி வாயிலாக கூறுகையில் இன முருகளை தவிர்க்குமாறும் அவ்வாறான பெயர்பலகை வைப்பதில் தவறில்லை என அவர் உத்தரவிட்டுள்ளதோடு சகல தரப்பினருக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார். அதனை தொடர்ந்து ஆளுனர் அவர்களினால் இந்த பெயர்பலகை திறந்து வைக்கபட்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.