Header image alt text

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும், ஜே.வி.பினருக்கும் இடையிலான சந்திப்பு, பத்தரமுல்லையில் உள்ள ஜே.வி.பியின் கட்சிக் காரியாலயத்தில் இன்றுபிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அதன் தலைவரான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். ஜே.வி.பி சார்பில், அதன் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால் காந்த ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். Read more

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார். முன்னாள் பணிப்பாளர் நாயகம் எம்.எம்.மொஹமட் ஒய்வுபெற்றுச் செல்வதையிட்டு, குறித்த வெற்றிடத்துக்கு, சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் மேலதிக தேர்தல் ஆணையாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. சமன் ஸ்ரீ ரத்நாயக்க, தேர்தல் ஆணைக்குழுவின் 4 ஆவது பணிப்பாளர் நாயகமாக விளங்குவதுடன், அவர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

தெற்காசியாவில் மிக உயரமான மேம்பாலம் கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது. 25 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட உள்ள இந்தப் பாலம் 5 மாடிகள் உயரத்தைக் கொண்டதாக இரண்டு கட்டடத் தொகுதிகளில் அமைக்கப்பட உள்ளது.

175 மீற்றர் உயரத்தைக் கொண்டதும், 10 மீற்றர் அகலத்தைக் கொண்டதுமாக இது நிர்மாணிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. (அரசாங்க தகவல் திணைக்களம்)

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட இன்று காலை வாக்கு மூலம் ஒன்றை வழங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்தார். ஆவர் சுமார் 8 மணிநேரம் அங்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை கைது செய்வதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து மார்ச் மாதம் 7ஆம் திகதி உத்தரவிட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னை கைதுசெய்ய முயற்சிப்பதாக தெரிவித்து அட்மிரல் வசந்த கரன்னாகொட மனுத் தாக்கல் செய்திருந்தார். Read more