Header image alt text

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 76 வாக்குகள் அளிக்கப்பட்டன.

கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றுடன் நிறைவடைந்தது. அதற்கமையை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததடன், மக்கள் விடுதலை எதிராக வாக்களித்திருந்தது. Read more

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு சம்பந்தமான மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்து வாபஸ் பெறப்பட்டுள்ளது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அர்ஜுன ஒபெசெகர முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதன்போது ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி குறித்த மனுவை வாபஸ் பெறுவதாக நீதிமன்றில் தெரிவித்தார். Read more

ஆசிரியர்-அதிபர் சேவையில் காணப்படுகின்ற சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசரியர் சேவை சங்கங்கள் நாளை சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட உள்ளன.

அதேநேரம் நாட்டின் பிரதான நகரங்களில் நாளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் நடத்த உள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க கூறியுள்ளார். நுகேகொட, பதுளை, பண்டாரகம, கண்டி, தங்காலை, புத்தளம், மொனராகலை, வெல்லவாய, மொறவக, ரத்தினபுரி உள்ளிட்ட 20 பிரதான நகரங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் என்ஜின் சாரதிகள் இன்று நள்ளிரவு முதல், சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள பிரச்சினைக்காக தீர்வு, தங்குமிட பிரச்சினை உள்ளிட்ட காரணங்களை முதன்மைப்படுத்தியே, இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதென, ரயில் என்ஜின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார். Read more

கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்ட பிரேம ரமணன் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சியில் காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளராக கடமையாற்றி வந்த 32 வயதுடைய பிரேம ரமணன் கடந்த 5ஆம் திகதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை கிளிநொச்சி காவல் துறையினர் அழைத்து சென்று விசாரணைக்குட்படுத்திய வேளையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more