மூன்று நீதியரசர்கள் அடங்கிய இரண்டாவது விஷேட நீதாய மேல் நீதிமன்றம் சற்றுமுன்னர் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகள் சம்பந்தமாக விசாரணை செய்வதற்காக இந்த நீதிமன்றத்தை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. அதன்படி முதலாவது விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இரண்டாவது விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக ரத்னபிரிய குருசிங்க, அமல் ரணராஜா மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோரை நியமிப்பதற்கு பிரதம நீதியரசர் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தார்.