பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் உலகின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு திடீரென சிறிது நேரம் செயல்பாட்டினை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் தங்கள் கணக்குகளில் நுழைய முடியாமல் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகினர்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, பேஸ்புக் விரைவில் செயல்பாட்டிற்கு வரும். உங்களது காத்திருப்பிற்கு நன்றி’ எனும் குறுஞ்செய்தி அனைவருக்கும் கிடைத்துள்ளது. எவ்வாறாயினும் இலங்கையிலும் குறித்த சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக கூகுள் நிறுவனத்தின் கூகுள் டிரைவ், ஹங் அவுட் போன்ற தளங்கள் சிறிது நேரம் செயல்படவில்லை.