Header image alt text

துயர் பகிர்வோம்!

Posted by plotenewseditor on 15 March 2019
Posted in செய்திகள் 

துயர் பகிர்வோம்!

தமிழ் தகவல் நடுவம்(TIC) 1984ல் இந்தியாவின் தமிழகத்தில் சென்னை, மதுரை நகரங்களில் தனது காரியாலத்தை அமைத்து செயற்பட ஆரம்பித்த காலந்தொட்டு நண்பர் வை. வரதகுமார் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் எமது அமைப்பின் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரனும் நானும் பெற்றிருந்தோம். தொடர்ந்து 1987 முதல் பிரித்தானியாவில் தமிழ் தகவல் நடுவம் செயற்படத் தொடங்கியதிலிருந்து இற்றைவரை இவருடனான எனது நட்பு தொடர்ந்தது.

எளிமையும் ஆழ்ந்த தமிழ் தேசியப்பற்றும் பழகுவதற்கு மிக இனிய சுபாவத்தையும் இயல்பாகவே தன்னகத்தே கொண்டிருந்த அவர் இலங்கையில் தமிழ் இனம் உரிமைகளை வென்றெடுத்து சுதந்திரமான ஒரு இனமாக வாழவேண்டுமென்பதில் வேணவா கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் அதற்காகவே தனது சிந்தனையையும் செயலையும் ஒருமுகப்படுத்தி தன் வாழ்நாழில் பெரும்பகுதியை கழித்தார். சகல தமிழ் விடுதலை அமைப்புக்களுடனும் ஏற்றத்தாழ்வு பாராட்டாது தொடர்பினைப்பேணிய அவர், தமிழகத்தில் தமிழ் தகவல் நடுவத்தினை சகல தமிழ் அமைப்புக்களும் தங்களுக்குள் தொடர்புகளைப் பேணவும் சந்திப்புக்களை ஏற்படுத்திக்கொள்ளவும் ஒரு களமாக பயன்படுத்த வழியமைத்தார். விடுதலை அமைப்புக்கள் ஒற்றுமையாக இலக்கினை நோக்கி பயணிக்கவேண்டுமென்ற அவரது முயற்சி இறுதிமூச்சுவரை தொடர்ந்ததாகவே இருந்தது ஒரு துரதிஸ்டம்.  Read more

பாரம்பரிய பிறப்பு சான்றிதழுக்கு பதிலாக நாளை முதல் இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகப்படுத்தப்படும் என்று உள்ளக உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

மோசடியான முறையில் ஆவணங்கள் தயாரிக்கப்படுவதை தவிர்ப்பதே புதிய இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகத்தின் நோக்கமாகும். – அரச தகவல் திணைக்களம்

நாட்டின் நான்கு மாகாணங்களில் வாழும் பத்து லட்சம் பேரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்திற்கென உலக வங்கி இலங்கைக்கு ஏழு கோடி அமெரிக்க டொலர்களை வழங்கியிருக்கிறது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவிருக்கிறது. வீதி அபிவிருத்தி சுகாதாரம் கழிவறை வசதிகள் என்பனவற்றை மேம்படுத்துவது பற்றி கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. உள்ளுராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புக்களும் இதற்காக பெற்றுக் கொள்ளப்படவிருக்கின்றன. Read more