நாட்டின் நான்கு மாகாணங்களில் வாழும் பத்து லட்சம் பேரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்திற்கென உலக வங்கி இலங்கைக்கு ஏழு கோடி அமெரிக்க டொலர்களை வழங்கியிருக்கிறது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவிருக்கிறது. வீதி அபிவிருத்தி சுகாதாரம் கழிவறை வசதிகள் என்பனவற்றை மேம்படுத்துவது பற்றி கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. உள்ளுராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புக்களும் இதற்காக பெற்றுக் கொள்ளப்படவிருக்கின்றன.இலங்கை வறுமையை குறைப்பதில் வெற்றிகரமான பெறுபேறுகளை கண்டிருப்பதாக உலக வங்கி அறிவித்திருக்கிறது. நாட்டின் வறுமை மட்டம் 2016ஆம் ஆண்டில் நான்கு தசம் ஒரு சதவீதம் வரை குறைவடைந்திருந்தது. ஆனால் நாட்டின் சில பிரதேசங்களில் இன்னும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

நீர் விநியோகம், சந்தை வசதிகள், கிராமிய மின்சாரம், தொலைத்தொடர்பாடல் ஆகிய துறைகளை மேம்படுத்துவது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. – அரச தகவல் திணைக்களம்